Friday, October 9, 2020

தோழர்.சேகுவாரா...

 தோழர்.சேகுவாராவின் மறக்கடிக்கப்பட


கடைசி அத்தியாயம்.


××××××××××××××××××××××××××××××××


10- 10- 17 இன்று ஒரு தமிழ் நாளிதழில்


வெளிவந்த தோ.சேகுவாராவை பற்றியான ஒரு கட்டுரையில் பொளிவியாவிலுள்ள லாஹிகுவாராவில் ஏகாதிபத்திய  ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழரில் உடல்  ஒரு ராணுவ ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டது.அந்த ஹெலிகாப்டரில் உடன் வந்த  சிஐஏ உளவாளி கஸ்டோட


வில்லோடாவை சற்று நினைவில் வைய்யுங்கள்.ராணுவ ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்ட தோழரின் உடல் எங்கு எரியூட்டப்பட்டது என்றோ எங்கு புதைக்கப்பட்டது என்றோ 50 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் மர்மமாகவே உள்ளது என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவத்திர்க்கு பின் நடந்த சம்பவங்கள் அவர் அறியாததாலோ அல்லது அதை தெளிவற்றதாக மறைப்பதர்க்காகவோ கட்டுரையாளர் அவ்விதம் குறிப்பிட்டிருக்கவேண்டும்.1967-ஆம் ஆண்டு தோழரின் மறைவுக்கு பின் 30ஆண்டுகளாக தோழரின் இறுதி சடங்குகள் சம்மந்தமாக க்யூபாவிலும் பொளிவியாவிலும்  எண்ணற்ற ஆய்வாளர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள்.இந்த கால அளவில் பொளிவியாவிலும் அரசியல் மாறுதல்கள் நிகழ்ந்து ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்திருந்ததது.இந்த சூழலில் இறுதியாக ராணுவ ஹெலிகாப்டரில் தோழரின் பூத உடலை ஏற்றிச்சென்ற முதலில் குறிப்பிட்ட சிஐஏ  உளவாளி கஸ்ட்டோடா வில்லோடா உண்மையை ஒத்துக்கொண்டான்.பொளிவியாவிலுள்ள வாலே கிராண்டா விமான ஓடுபாதைக்கு அருகில் புதைக்ப்பட்டதை அடையாளம் காட்டமுடியுமென்று அவன் உறுதியளித்தான்.


     சில எலும்பு கூடுகள் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.கைகளின்றி இருந்த அந்த உடல் கருப்பு பெல்ட் அணிந்திருந்ந அந்த உடலே சேகுவாரா என அடையாளம் காணப்பட்டது. சே படுகொலை செய்யப்பட்டபின் அவரது இரு கைகளும் வெறிபிடித்த ஏகாதிபத்திய நாய்களால் வெட்டி எடுக்கப்பட்டதை அந்த சிஐஏ  உளவாளி முன்பே சாட்சியம் அளித்திருந்தான். அங்கிருந்து 20 கிமி தொலைவிலுள்ள சாந்தா குரூஸ்  மருத்துவமனையில் அந்த எலும்பு கூடுகள் ஒரு உலோக தகிட்டில் வைக்கப்பட்டன.கிழிந்து நைந்துபோன ஆடை, சூ எல்லாம் வைக்கப்பட்டன. அவரை புதைக்குமுன் எடுக்கப்பட்ட புகைப்படங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.


       சேவின் உடலை அதுவும் புதைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குபின் தோண்டி எடுக்கப்பட்ட உடலை காணவும் வீர அஞ்சலி செலுத்தவும் தென்னமேரிக்க கண்டத்தின் மக்கள் திரள்  அங்கு திரண்டது.சேகுவாரா யுகங்கள் தோறும் உயர்த்தெழும் அணையா கங்கு என உலகுக்கு பறைசாற்றியது..சே கொல்லப்பட்டபோது எதிர்மறையாய் செய்தகள் வெளியிட்ட ஊடகங்களும் இப்போது வீரகாவியமாய் சித்தரித்து எழுதின.


1997-ல் பெடல் காஸ்ட்ரோ சேவின் உடலை பெற்றுக்கொண்டார்.சேவின் உடலை வரவேற்று க்யூபாவில் திரண்ட மக்கள் கூட்டம்,சே க்யூபா மக்களின் நெஞ்சங்களில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பதை பறைசாற்றியது.


க்யூபாவில் ஸாண்டா கிளாரா நகரில் கட்டப்பட்ட நினைவகத்தில் சேவின் உடல் பல லட்சம் மக்களின் பங்களிப்புடன் சகலவவிதமான மரியாதைகளுடனும் 1997-ஆம் ஆண்டு 


அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி புதைக்கப்பட்டது


அப்போது காஸ்ட்ரோ ஆற்றிய உரை உணர்ச்சி பிழம்பாய் தகித்தது.


" மீண்டும் ஒருபோதும் நிகழமுடியாத உணர்ச்சிமயமான அற்புத கணங்களில் நாம் ஆழ்ந்த ஈடுபாடுடன் கரைந்து நிர்க்கிறோம். சேவுக்கும் வீரம் செறிந்த தோழர்களுக்கும் விடை கொடுக்க நாம் இங்கு கூடவில்லை, சேவை வரவேற்கவே கூடியுள்ளோம்.


நான் சேவையும்  அவரது சக கொரில்லாக்களையும் வலிமைமிக்க படையாக...போராளிகளின் படையாக காண்கிறேன்.


ஒரு நினைவு தூணில் அடங்கக்கூடியவரா அவர்?


இந்த சதுக்கத்துக்குள் ஒடுங்குபவரா அவர்?


என் அன்புக்குரிய--- ஆனால் இந்த சின்னஞ்சிறு தீவில் முடங்குபவரா அவர்?


அவர் எதர்க்காக கனவு கண்டாரோ- வாழ்ந்தாரோ- போராடினாரோ அந்த உலகில் அவருக்கென நினந்தர இடம் என்றென்றைக்கும் உண்டு.


மனித சமூகம் எந்த அளவுக்கு அதிகம் சுரண்டப்படுகிறதோ,எந்த அளவுக்கு அசமத்துவவும் வேலையின்மையும்


பஞ்சமும் பட்டணியும் துன்ப துயரங்களும் உள்ளனவோ அந்த அளவுக்கு சேவின் ரூபம் விஸ்வரூபம் எடுக்கும்.


சே முன்னெப்போதையும் விட மேலுமதிக போர்க்களங்களில்


நிற்கிறார்!வெல்கிறார்.உங்கள் முன்னுதாகரணத்துக்கு நன்றி அன்பு தோழரே ".


ழீழ்பதிவு.

No comments: