13.03.2022
காலை வணக்கம்.
ஆம், உருமாற்றம் சீடத்துவத்துக்கு இன்றியமையாதது...
வேடங்களில் உருமாறினோம், அதுவே நமக்கு ஒருவகை அரணாக அமையக்கண்டோம், அதையே வசதியாக்கிக்கொண்டோம்...
ஆனால், நிகழவேண்டி யிருந்தது உள்ளுக்குள் உருமாற்றம், அதற்கு சிலுவைவரையிலான விலை கொடுக்க நேரிடும், எனவே அதை வசதியாக தவிர்க்கிறோம்! என்னே முரண்பாடு!! உள்ளுக்குள் நிகழ வேண்டிய இந்த உருமாற்றம் நிரந்தர தேடலின் விளைவு, இதற்கு வேண்டும் நிகரில்லா துணிவு, இயேசுவுக்குண்டான துணிவு, அதுவே சீடர்கள் கண்டு வியந்த அவரது உருமாற்றம்...
உண்மையுடன் முயல்வோம் இந்த தேடல், அதன் விளைவாக நிகழட்டும் உள்ள மாற்றம், அதுவே மனம் திரும்புதல், தவக்காலத்தில் அறிவுறுத்தப்படும் மனத்திருப்பம்...
இந்நாள் இனிய நன்னாளாகட்டும்!
வாழ்க!! வணக்கம்!!!
No comments:
Post a Comment