Thursday, July 11, 2019

தீபக் - ஷானு 13.07.2019


       மண வாழ்த்து..!
ஆணும் பெண்ணும் சேர்ந்ததே மனிதம்
அங்கே தனிமைக்கு இடமேது!  
ஆணுக்கு துணையாக பெண்   
அவன் எலும்பின் எலும்பும்
சதையின் சதையுமாக வலம் வந்தாள்...

தீபக், உனக்கந்த துணையாக
படைப்பின் தொடக்கத்திலிருந்தே  
ஷானுவையும், அவளுக்கு உன்னையும்
தேர்ந்துவைத்தான் பரமன்...

நீயின்றேல் அவள் பாதி
அவளின்றேல் நீ பாதி
இதுவொருவகை அநீதி
இரண்டும் சேர முழுமதி
அதுவன்றோ நிம்மதி...

தொடர்ந்து வளரும் உறவில்
ஒருவர் ஒருவரைத் தேடுங்கள்
தேடல் நாடலாக, கூடலாக,
மழலையாக மலரட்டும்...

ஆண்டொரு பிள்ளை ஆயிரம் பெறலாம்
இயேசுவைப்போல இன்னொரு பிள்ளை
ஈசனைக்கேட்டுநீவிர் பெறுக
அறம், பொருள், இன்பம் அடைக
பார்போற்ற பல்லாண்டு வாழ்க...
-        இரையுமன் பங்கி/ 13.07.2019

No comments: