தென்றலுக்கும் ஒரு வாழ்த்து தேவையா...
நமது கிராமத்தின் இலக்கிய மலர், 'தீபகற்ப தென்றல்' பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளிவரவிருப்பதில் மகிழ்கிறேன், அதன் பின்னணியில் செயல்படும் அனைவருக்கும் நன்றி உரித்தாக்குகின்றேன்.
இயற்கையின் அரவணைப்பில், அதன் பல்வேறு வடிவங்களை -அதன் சீற்றத்தை, சிருங்காரத்தை - பல வகையில் அனுபவிக்கும் நம்மூர் மக்களுக்கு அழகியல் ஒன்றும் அந்நியமல்ல, இலக்கியமும்...
படைப்புத்திறனும், கற்பனை வளமும், கருத்துச்செறிவும் பெற்ற நமக்கும் இலக்கியம் படைக்க முடியும், அதை ரசிக்க முடியும். அதை ஏற்கெனவே நிரூபித்துவிட்டோம் முதல் மலரிலேயே... இப்போது இன்னும் வளர்ந்திருக்கிறோம், அனுபவங்கள் நிறைய பெற்றிருக்கிறோம்... எழுதுவோம் அவற்றை வரும் தலைமுறைகளுக்காக... இதுவே சரித்திரமாகலாம்...
நமது இனம் இதுவரை இலக்கிய துறையில் தனது திறமைகளை சரியான முறையில் பதிவுசெய்துகொள்ளவில்லை... நமது முயற்சிகள் அந்த இலக்கை எட்டட்டும்... வாசகர்ளுக்கு விருந்தாகட்டும் நமது படைப்புக்கள், வருங்காலத்துக்கு வரலாறு சொல்லட்டும் அவைகள்...
வாழ்க இந்த அரும் முயற்சி...
வளர்க நம் இலக்கியம்...
வளம் பெறட்டும் தமிழ் இலக்கியம்...
-பணி. பங்கிராஸ் அருளப்பன்
(வழக்குரைஞர், திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்கள்)
11.11.2013