ஆன்ட்ரியாகண்ணு - ஆண்டவர்
தந்த அருமைக்கண்ணு
டான்-கமி தம்பதியரின்
தங்கக்கண்ணு ...
இன்றுவரை இயற்கை மகள்
இன்றிலிருந்து இறைவன் மகள்
அதற்கென கொணர்கிறர்
திருமுழுக்களிக்க...
சடங்கு, சம்பிரதாயம் சாதாரணற்கு
சான்றோர்க்கு சகலத்தின் அடிப்படை
மழலையுனக்கு உறவுகள் கூடி
உனக்கென ஜெபிக்கும் உன்னதவேளை ...
நினைவில்கூட நிற்பது அரிது
அறிவும்கூட ஆகாதிப்போது
இருந்தும் உனக்கு திருமுழுக்கென்றால்
பெற்றோருக்கே பொறுப்பு அனைத்தும்..
'இயேசுவைப்போல இன்னொரு பிள்ளை'யாக
உன்னைவளர்க்க உறுதி ஏற்கின்றார்
மரியாள்-சூசை திருக்குடும்பமாக
ஆதாரம் அமைப்பர் நீ இயேசுவாக...
பெற்றோருக்கு மட்டுமல்ல
மற்றோருக்கும் மகளே நீ
இறைவனின் பிள்ளையாகும் நீயோ
அனைவருக்கும் சகோதரி, தோழி...
இறைமகளாய் வளர்க
இறையன்பால் நிறைக
இறையரசை நனவாக்கி
இனிமை சேர்க்க இனியென்றும் ...
வாழ்க, வளர்க,
வழியும், வாய்மையும் வாழ்வுமாக!
- பங்கி தாத்தா
மலமுகள்
05.02.2014