Thursday, October 9, 2025

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து பெரியார்...

 கேள்வி: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து உங்கள் பார்வை என்ன..?


பெரியார்:


பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை,

ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா, தங்கைகள் என்று கருதுகிறார்கள். 

இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. 


இந்தத் திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள் தான்.‌ அது தமிழ்தான்!


கேள்வி: 

அப்படியானால் தமிழில் இருந்து தானே மீதி மூன்று மொழிகளும் பிறந்திருக்க வேண்டும்?


பெரியார்: 

நான்கு பெயர்களில்  வழங்கப்பட்டாலும் 

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் நான்கு இடங்களிலும் பேசப்படுவது 

தமிழ் ஒன்று தான். 


நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. 

ஒன்று தான் நான்காக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது.


கேள்வி:  

மொழி அறிஞர்கள் கூடவா இப்படி அறியாமையில் இருந்திருப்பார்கள்?


பெரியார்: 

போக்குவரத்து  வசதி இல்லாத, 

ஒருவருக்கொருவர்  தொடர்பு இல்லாத அந்தக் காலத்தில் 

அந்தந்த மண்ணின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப 

தமிழ் உச்சரிப்பில் சில மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. 


நம்மை நாலு ஜாதியாக பிரித்து வைத்த ஆரியம், 

நம் மொழியையும் நான்காகப் பிரித்து வடமொழியை புகுத்தி, திராவிட மொழியையே கெடுத்துவிட்டது. 


அன்றைய பண்டிதர்கள் ஆரியத்திற்கு 

அடிமைப்பட்டு இருந்ததால் அதைத் தடுக்கவில்லை. 


இன்று வரையும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரிய மோகம் தீர்ந்தபாடில்லை.


கேள்வி: 

வடமொழியால் கெட்டதாகச் சொல்கிறீர்களே... 

அந்த திராவிட மொழி எது?


பெரியார்: 

திராவிடமொழி தமிழ் தவிர வேறு இருக்க முடியாது.


கேள்வி: உங்கள் கருத்தை‌ மற்ற மூன்று மொழிக்காரர்களும் ஏற்பார்களா?


பெரியார்: ஆரிய மோகம் அற்ற ஒரு 

தெலுங்கு பண்டிதர்,

ஒரு கன்னடிய பண்டிதர், ஒரு மலையாள பண்டிதர், ஒரு தமிழ்ப் பண்டிதர் ஆகிய நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து 

நாலு மொழி அகராதிகளையும் வைத்துக் கொண்டு, அவற்றில் உள்ள வடமொழி வார்த்தைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் 

எஞ்சி இருப்பது தமிழ் வார்த்தைகள்தான் என்பதையும் 

100 க்கு 5 வார்த்தை கூட தமிழ் அல்லாத வார்த்தைகள் இருக்காது என்பதையும் உணர்வார்கள்.


கேள்வி:

 மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் தமிழ்தான் என்று நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?


பெரியார்:


 தமிழில் 'வீடு' என்பதை 

தெலுங்கர் 'இல்' என்றும்,

கன்னடர்'மனை' என்றும், 

மலையாளி 'பொறை' என்றும் கூறுவார்கள். 


தமிழில் 'தண்ணீர்' என்பதை தெலுங்கர் 'நீளு' என்றும், கன்னடர் 'நீரூ' என்றும், மலையாளி 'வெள்ளம்' என்றும் கூறுவார்கள்.


நாம் 'எனக்கு' என்று கூறுவதை 

தெலுங்கர் 'நாக்கு' என்றும், 

கன்னடியர் 'நெனக்கி' என்றும், 

நாம் 'பசு' என்பதை தெலுங்கர் 'ஆவு' என்றும், 

கன்னடர் 'அசு' என்றும், 

மலையாளி ''ஆவ்' என்றும் 

கூறுவார்கள். 


நாம் 'அங்கே' என்பதை ஒருவன் 'அவடே' என்றும், ஒருவன் 'அக்கடே' என்றும் கூறுவர்.


நேக்கு,  நோக்கு, அவாள், இவாள் என்று பேசுவதெல்லாம் தமிழ் என்று கூறும் போது 

நாக்கு, நெனக்கி, எனக்கி, இல், மனை, பொறை, நீளு, வெள்ளம் என்று கூறும் மக்களைத் தானா வேறுமொழி பேசுபவர்கள் என்று ஒதுக்க வேண்டும்? 


ஆகவே தான் நான் கூறுகிறேன். 

இவை நான்கும் நான்கு இடத்தில் நான்கு பெயருடன் வழங்கப்பட்டு வரும் ஒரே மொழியே தவிர நான்கு அல்ல. 


ஆரியம் தான் இவற்றை நான்காக பிரித்து வைத்துள்ளது. 

இந்த  ஆரியத்திற்குக் கையாளாக இருப்பவர்கள்தான் தம் அறியாமையால் இப்பிரிவினைக்கு ஆக்கம் விளைவிக்கிறார்களே ஒழிய 

உண்மையில் இவை நான்கும் ஒன்றுதான். 


சுயநலம் மறந்து, உண்மை மொழிப்பற்று கொண்டு ஆரிய வட சொற்களை நீக்கிப் பார்த்தால் இவை நான்கும் ஒரே மொழிதான் என்பது தீர்க்கமாய் விளங்கும்.


கேள்வி: ஆக நான்கு மொழிகளும் தமிழ்தானா?


பெரியார்:

இவை நான்கும் ஒரு உதிரத்தில் இருந்து உதித்து எழுந்தது அல்ல 

அந்த உதிரமேதான் இவை நான்கும் 


என்னருந் தமிழே! 

நீயேதான் தெலுங்கு, 

நீயேதான் மலையாளம், 

நீயேதான் கன்னடம் என்றுதான் நான் கூறுவேன். 


இவை வெவ்வேறு மொழிகளாய் இருந்தால் இவைகளுக்கு முதல் நூல்கள் எங்கே? 


தமிழுக்குத் தான் முதல் நூல்கள் எத்தனை உள்ளன? 


அத்தனையும் ஆடிப்பெருக்கத்தில் ஒழித்த ஆரியக் கூட்டமும், 

அவர்களின் அடிவருடிகளும் தானே 

இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகிறார்கள்?


கேள்வி: உங்கள் கருத்தால் தமிழுக்குக் கேடு வராதா?


பெரியார்: 

உண்மையாகத் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் 

பாடுபடுபவர்கள் திராவிடர் 

கழகத்தார்கள் தான். 


நாங்கள் திராவிட நாடு, திராவிட மொழி என்று கூறும்போது 

மொழி போச்சு, மொழி போச்சு என்று கூப்பாடு போடும் தோழனே! 


எங்கள் முயற்சியால் எதுபோகும்? 


உங்கள் அறியாமை வேண்டுமானால் போகுமே ஒழிய உண்மையில் தமிழுக்கோ, தமிழ்நாட்டிற்கோ கடுகு அளவேனும் கேடு வருமா?


(10.01.1948 - 'குடிஅரசு' இதழில் பெரியார் எழுதிய 'மொழி ஆராய்ச்சி' கட்டுரையின் ஒரு பகுதி)

நிறைவேறாத ஆசை... ‘நக்சலைட்’ ஆக வேண்டும்... [சில்க் ஸ்மிதா]

 https://www.facebook.com/share/p/1AJMXpJmSE/



‘‘ஒரே கேள்வி...’’ என்றார் ஆந்திர பிரபா எனும் ஊடகத்தின் நிருபர்.


‘‘கேளுங்கள்’’ என்றார் சுமிதா.


நிருபர் : இப்போது தமிழ், தெலுங்கு, படங்களில் நீங்கள் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள். கதாநாயகர்கள் கூட உங்களுக்காகக் காத்திருக்கும் அளவுக்கு நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள். நினைத்ததை எல்லாம் நீங்கள் பெறமுடியும். இப்போதும் கூட உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்று ஏதாவது இருக்கிறதா?


சுமிதா : ஆசைப்படாதவர் யார்? ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்தவர் யார்? எனக்கும் ஒரு ஆசை இருந்தது. ஒரே ஓர் ஆசைதான். நான் ஒரு ‘நக்சலைட்’ ஆக வேண்டும் என்று எனக்குள் ஆசை வளர்த்தேன். அது நடக்கவில்லை. நாளும் நாளும் நெருங்கிய பிரச்சினைகளின் அலைகள் மோதி மோதி என் வாழ்க்கை திசைமாறிப் போனது. ஆனால், அந்த நெருப்பு என் நெஞ்சில் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது!


நிருபர் : புகழின் வெளிச்சத்தில் நடக்கும் எந்த அழகியும் இப்படி ஆசைப்பட மாட்டார். விநோதமாய் இருக்கிறது.

நக்சலைட் ஆக வேண்டுமென்றா ஆசைப்பட்டீர்கள்..?


(ஒரு கவர்ச்சி நடிகையிடம் இருந்து இப்படியொரு பதில் வரும் என்று நிருபர் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை)


சுமிதா : ஆம். உங்களுக்குச் சந்தேகமா?


நிருபர் : நக்சலைட் என்றால் என்ன? யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? மேடம்... 

நக்சலைட் என்றால் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி...


சுமிதா : (ஒரு பெருமூச்சு விட்டவாரே தொடர்கிறார்...) ‘‘அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’’


(நிருபர் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார்) 


சுமிதா : இங்கே ஒரு வேடிக்கையான முரண்பாடு துருத்திக்கொண்டிருக்கிறது. பலவீனமானவர்கள்தான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறார்கள்.

சர்வாதிகாரிகள் தான் அப்பாவிகளைக் கூட ஆயுதம் தூக்க வைக்கிறார்கள்...


நிருபர் : (தனது குறிப்பேட்டை மூடிவிட்டு...) நீங்கள் சொன்னதை எல்லாம் நான் எழுதலாமா?


சுமிதா : உங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் உங்களை அனுமதிக்கும் வரை எழுதலாம்.!

Face book post on inspiring teachers...

 https://www.facebook.com/share/p/1BQDfxLCnZ/

கண்களை கலங்க வைத்த பதிவு 😔

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்

தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,

வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது

இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்

காணும் ௭ உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்

ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி ௭ டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள் அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான

வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று

அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் ௭ வகுப்பறையே சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?

என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” 

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்.!

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள

குணாதிசயங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும், சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது. பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த

மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்

சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,

மரணம் அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

இறுதிச் சடங்கில்..,

கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் 

நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை

செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.

பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்

அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு

டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -

எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி

எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்

தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.

இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது

பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -

பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

ஆமாம் ௭ பல வருடங்களுக்கு

முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல

குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

“ரொம்ப நன்றி டீச்சர் ௭ உங்கள் கடிதத்தை அவன்

உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்

அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,

பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து

கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் ௭ எப்படி இருக்கும் - எப்போது,

எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் ௭ நம்முடன் இருப்பவர்களை

அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால், நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,

அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -

அநேகமாக ௭ நாம் வெளிப்படையாக பாராட்டத்

தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல... அதன் அவசியம் நமக்குத்

தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல் நன்றாக இருக்கும்போது ௭ பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே, பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ - யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் - அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும். 🤝  படித்துப் பகிர்ந்தது [01.10.2025]

Amma [AI photo by Bhuvithakkannu...]