'காணி நிலம் வேண்டும்...' அன்று கேட்டான் பாரதி. இன்று அறைகூவல் விடுக்கின்றனர் இரயுமன்துறை இளைஜர்கள் ['இரயுமன்துறை நண்பர்கள் குழாம்'] அழியும் ஒரு கிராமத்தை காக்கும் அனைத்து முயர்ச்சிகளுக்குமாக... இந்த அரிய முயற்சியை ஆதரிப்போம், வாழ்விடம் பாதுகாப்போம், நமக்காகவும் - நமது வருங்கால தலைமுறைகளுக்காகவும் .
இன்றைய போட்டி, சுயநல, ஆணவ கண்ணோட்டங்களுக்கு மாறுபட்டு சிந்திக்கும் இவர்களை நாம் ஊக்கப்படுத்தவேண்டும், அவர்களது தேவையை நிறைவேற்ற வேண்டிய அனைத்தையும் ஒன்றுசேர்ந்து செய்தாகவேண்டும், ஊரை காப்பாற்றியாக வேண்டும், கடல் ஆக்கிரமிப்பிலிருந்தும் அதை கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தும் அரசு அமைப்புக்களிலிருந்தும்.
அன்றைய அரசு கரைபுரண்ட நீரை மண்ணால் நிரப்பி கரையும் கட்டி பத்திரமான வாழ்வுக்கு உத்திரவாதம் தந்தது. இன்றைய அரசுகள் ஒரு ஊரின் வாழ்விடமே பறிபோவதை வேடிக்கை பார்ப்பதாய் தோன்றுகின்றது! ஆவன செய்து அரசை கட்டாயப்படுத்துவோம், வாழ்விடம் பத்திரப்படுத்துவோம்.
No comments:
Post a Comment