Thursday, March 11, 2021

ஆத்யா சாகர்...

 ஆத்யா சாகர்   

                            28.01.2021

பெண்மையின் பேறன்றோ தாய்மை

அந்த பேறுக்கு காரணம் தந்தை

நீவிர் இருவருக்கும் இறைவன் தந்த

அருங்கொடையே அழகுமகள் ஆத்யா!

 

நட்பைகாதலாக்கிய  இலட்சியகாதலர் நீவிர்

அதையே கல்யாணமாக்க, குடும்பமாக்க

மதங்களுக்கு மேலாக மனிதத்தை போற்றிய பெருந்தகையோர் நீவிர்

 

படைப்பின் சிகரமென  படைக்கப்பட்டும்

மனிதனில் தம் உருவை காணாத கடவுள்

மனுஷியை படைத்தானாம்!

 

ஆம், அதனால் தானோ 'மங்கையராக

பிறப்பதற்கே மாதவம் செய்திடல்

வேண்டுமம்மா' என்றான் போலும் பாரதி!

 

தன் மகள் சான்றோள் எனக்கேட்டு

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க'சிஞ்சுவுக்கும்

இவள் 'தந்தை என்னோற்றான்' என

பிறர் வியக்க பிரசாதுக்கும்

அருள்தர வேண்டுகிறேன்.

 

'பெண்களுக்குள்' இம்மகள் ஆத்யா

'ஆசி பெற்றவளாக', 'தலைமுறைகள்' இவளை 'பேறு பெற்றோள்' எனப்

போற்ற இறைவன் இம்மகளையும் ஆசீர்வதிக்கட்டும்...

                                            -இரையும்மன் பங்கி                                                                                         

                                                                           08.03.2021

No comments: