Wednesday, January 17, 2024

Something Personal - WhatsApp - 03.10.2023

 ஜாக்கி, நலமா, நீயும் குடும்பவும்? நலம் நாடுகிறேன், அதற்காக வேண்டுகிறேன்.

எனக்கொரு உதவி தேவை.

முதியோர் ஓய்வூதியம் பெற எனக்கு தகுதி உண்டென்று நினைக்கிறேன். எனில் அது பெறுவது எப்படி என தேவையான விவரங்கள் தர முடியுமா?

எனக்கு ஊரில் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் பதிவு சீட்டும் உண்டு.

ஆதார் கார்டு இங்கு திருவனந்தபுரத்திலும்.

ஓய்வு பெறும் நாட்களில், குருக்களுக்கான ஓய்வு இல்லத்தில் போகவோ, அத்தகைய வசதிகள் அனுபவிக்கவோ விரும் பவில்லை.

என்றும் போல ஒரு சாமான்யனாக வாழும் வரை வாழ்ந்து இறக்க வே விரும்புகிறேன்.

இறந்த பிறகு விளம்பர மில்லாமல், யாருக்கும் ஒருவகை இடைஞ்சலும் இல்லாமல் மத சடங்கு சாம்பிரதாயங்கள் இல்லாமல் உடலை தஹிப்பிக்க (எரியூட்ட) வோ, புதைக்கவோ செய்தால் போதுமானது. எனவேதான், முன்னெச் சரிக்கையாக இப்படி சிந்திக்கிறேன்.

உனக்கு மட்டுமே இந்த விருப்பத்தை தெரிவிக் கிறேன்.

இந்த பொறுப்பை நிறைவேற்ற ஒரு குடும்ப பெண் என்ற முறையில் சிக்கல்கள் உண்டு என்பதும் தெரியாமலில்லை.

யாரை வேண்டுமானா லும் கலந்தாலோசிக் கலாம். தேவையான சமயம் எடுத்து சிந்தித்து ஒரு பதில் வசதிபோல் தந்தால் நல்லது. 

வீட்டில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி.

No comments: