Tuesday, January 27, 2026

எழுபத்திரண்டிற்கு...

 பிறந்தநாள் [ஜனவரி இருபத்தியெட்டு - திருமுழுக்கு பதிவேட்டின் படி, மற்றும் மே பத்து - பள்ளி பதிவேடு] கொண்டாட்டம் என்பதே தெரியாது, 'அருட்'பணி பயிற்சிக்கு வரும்வரை... பங்கு பணிக்கு வந்தபிறகு அது தெரிந்தவர்கள் வாழ்த்த முன் வந்தபோதெல்லாம் மறுத்திருக்கிறேன், தப்பித்துமிருக்கிறேன்...  கொஞ்சம் காலமாக வெளியே எங்கேனும் போயி தனித்து அந்த நாளை செலவழிப்பது சாதாரணமாகிவிட்டது... இன்று  பேராயர் (ஓய்வு) சூசை பாக்கியம் அவர்களின் தம்பி, ஆல்பர்ட் இறந்து நல்லடக்கம் செய்யப்படவிருப்பதால், அவர்  மறைமுகமாக விரும்பியபடி அதில் கலந்துகொள்ள பங்கிலேயே இருந்துவிட்டேன், காலை திருப்பலிக்குப்பிறகு... 

திடுப்பலி தொடக்க உரையில் இன்றைய முதல் வாசகம் இரண்டு சாமுவல் ஆகமம் பகுதியில் ஆலயத்தில் வாழ விரும்பும் கடவுளை வாசிக்க மனதில் அக்பர் பிச்சைக்கு வந்த துறவி கதை சொன்னேன்... அத்தோடு கோயிலில் வெளிவேடம் விரும்புவோரை கண்டித்தும் பேசினேன்... 

திருப்பலிக்கு பிறகு ஷைன் (விங்க்ஸ்டன்)  வந்து என்னை வாழ்த்தி ஆச்சர்யப்படுத்திவிட்டான்....

No comments: