Wednesday, December 14, 2011

கமிதக்கண்ணு,
இதோ பார் அந்த கவிதை:

வீடெங்கும் விழாக்கோலம் 
சுற்றமெல்லாம் சுறுசுறுப்பு
காரணம் ஏன் சொல்லு...
கல்யாணம்தான்... கமிக்குத்தான்!

    வாருங்கள் வாழ்த்துவோம் 
    சேருங்கள் சேர்ந்து பாடுவோம்.

கண்டதும் காதல் அல்ல
கேட்டதும் காதல் மெல்ல 
வளர்ந்தது பிறையினை வெல்ல 
நிறைந்தது மணமென சொல்ல!

கமி 'தனி'மையிலிருப்பது நன்றன்று 
துணையென வந்தான் டான் இன்று 
சேர்ந்தே வாழ்க இனி என்றும் 
இன்பம் சுவைக்க குறை வென்று.
                                        - மாமன் 

No comments: