Tuesday, February 11, 2025

சிலை வழிபாடு...

இதுவரை நான் செய்யாத ஒரு காரியம் நண்பர் ஒருவருக்காக செய்திருக்கிறேன், அதாவது 47 நிமிட ஒளிப்பேழையை, அதுவும் மதம் சார்ந்த, வேதாகமம் சார்ந்த ஒன்றை பார்க்க. தொடர்ந்து, எனது அபிப்பிராயத்தை எழுதுகிறேன்: முதலில் வேதாகமம் பற்றிய ஒரு அடிப்படை தகவல் - எந்த அளவுக்கு வேதாகமம் 'கடவுளின்' வார்த்தையோ அந்த அளவுக்கு அது மனிதனின் வார்த்தைகூட... (As much Bible is the word of God, that much it is word of man also'. கடவுளை யாரும் கண்டதில்லை, (கண்டவர் யாரும் சொன்னதுமில்லை)! கடவுள் மனிதனின் கற்பனை என்றும், அவனது படைப்பு என்றும் சொல்பவர்கள் உண்டு. மலையாளக் கவிஞர் குஞ்சுண்ணி சொல்வது கவனிக்கப்படவேண்டிய ஒன்று: ஆறாம் நாள் கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்தான். ஏழாம் நாள் மனிதன் கடவுளை கல்லிலிருந்தும்... (ആറാം ദിവസം മണ്ണാൽ സൃഷ്ടിച്ചു മർത്യനെ ദൈവം/ ഏഴാം ദിവസം കല്ലാൽ ദൈവത്തെയും തഥാ...). மேற்குறிப்பிட்ட ஒழிப்பேழை பேச்சில் அவர் பயன்படுத்தும் வெளிப்பாடு ஆகமம், வித்யாசமான இலக்கிய, கற்பனை சார்ந்த நடை- கொண்டது... கடவுள் அரூபி என மதங்களே சொல்கின்றன, எனில் ஆண்-பெண் வித்யாசமேன்! அதனால்தான் என்னமோ இந்து மதம் கடவுளை 'அர்த்தநாரீஸ்வரர்' என சொல்கிறது.. மேலும், அவர் பெண்/ ஸ்த்ரீ கடவுளாக முடியாது, கூடாது என சொல்கிறார்... கடவுளே 'மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்' என்று அவரே ஏற்றுக்கொள்ளும் வேதகாமம் சொல்லுகிறதே! பெண் எந்த வகையில் ஆணை விட குறைந்தவள்? உள்ளபடி, அவளே உயர்ந்தவள், தாய்மையால்... இந்திய தத்துவ சாஸ்திரம் 'சிவம்-சக்தி' எனவும் 'பிறகிருதி-புருஷன்' எனவும் பிரபஞ்சத்தை புரிந்து வைத்திருக்கிறது. எனவேதான் சிவன் தன் சரிபாதியாக சக்தியை ஏற்றுக்கொண்டு அர்த்தனாரீஸ்வரனாக தோன்றுகின்றான். இதையே அந்த போதகர் மறுக்கிறார். மேலும், அத்வைத சித்தாந்தம் 'பரம்பொருள்' இரண்டல்ல என சாற்றுகிறது. எனில், அது மூன்றும் (திருத்துவம்) அல்ல. பிறகு, சிலை வழிபாட்டை எடுத்துக்கொண்டால், கடவுளை மனு உருவில் சித்தரிப்பது எங்ஙனம் சிலை வழிபாடல்ல என்று சொல்ல முடியும்! உருவமில்லாத ஒன்றுக்கு உருவம் கொடுப்பதே சிலை வழிபாடு தான். அந்த பரம்பொருளை எந்த படைப்புமாக ஒப்புவித்தாலும், அது பணமோ, பதவியோ, அதிகாரமோ எதுவானாலும் அவையும் சிலை வழிபாடே. மனிதனும் ஒரு படைப்பே. மனிதனுக்கு சில நேரங்களில் சிலைகள் தேவைப்படுகின்றன, சில உண்மைகளை, நிஜங்களை, வாழ்க்கை மதிப்பீடுகளை நினைவூட்ட, ஞாபகப்படுத்த... படங்கள், புகைப்படங்கள், சித்திரங்கள், ஞாபக சின்னங்கள், பொருட்கள் என்பன - அவையும் சிலைகளாக கருதப்படலாம்... மேலும் சொன்னால் கடவுள், ஆன்மிகம் என்பன விவாத விஷயம் அல்ல, அது அனுபவிக்க வேண்டியது... மதம் ஒரு அமைப்பு, கட்டமைப்பு - சடங்கு, சாம்பிரதாயம், சட்டம் என மனிதன் தன் தேவைக்கேற்ப, வசதிக்கேற்ப உண்டாக்கியவை... நன்றி. [FB 12.02.2022]

No comments: