ஏற்புரை - நன்றியுரை
10.05.2025 @70
மதிப்புக்குரிய தமிழ் செம்மல் குமரி ஆதவன் அவர்களே,
மதிப்புக்குரிய முனைவர் டன்ஸ்டன் அவர்களே, மரியாதைக்குரிய எனது தமிழ் ஆசிரியர் சேவியர் பாஸ்டின் அவர்களே, பாசத்துக்குரிய அண்ணன் அருள் சினேகாம் அவர்களே, உடன்பிறவா தங்கை ஜாக்குலின் அவர்களே, முனைவர்
மச்சான் சேவியர் தாஸ் அவர்களே அருமை உறவுகளே, அன்பு நட்புகளே...
எனது இந்த 70 ஆண்டு வாழ்வில் தம்பி இரையுமன் சாகர் தூண்டுதலால் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்வுக்கு உங்கள் முன்னிலையில் நிற்கிறேன்.
'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்று கேட்டு வளர்ந்த நான் தமிழை, குறிப்பாக அதன் கவிதையை நேசித்தேன், நேசிக்கின்றேன்...
பள்ளி இறுதிக்கு பிறகு திருவனந்த புரத்தில் குருமடம் சேர்ந்த எனக்கு, அங்கு மலையாளம் பேசும் கட்டாயம் ஏற்பட்டது.
பிறகு ஆலுவாயில் படிக்கும்போது நூலகத்தில் ஒரு சிறு பகுதி தமிழுக்கும் கொடுத்திருந்தார்கள்.
[19:52, 11/06/2025] Pankiras Arulappan: அங்கிருந்த புத்தகங்கள் பெரும்பாலும் வாசித்த நான் அங்கு எனது தத்துவ பட்டபடிப்புக்கு 'திருக்குறளில் இல்லறம்' எனும் தலைப்பில் ஆய்வுகட்டுரையும் செயதேன்.
அப்போதிலிருந்தே சிறு கவிதைகள் புனைய தொடங்கினேன். "கடவுளின் பிரதிநிதி' போன்ற மாத இதழுக்கு அனுப்பு முன், இன்று வருகை தந்திருக்கும், திரு எப்பபிராஸ் அவர்களிடம் திருத்தங்கள் வாங்கி அனுப்பியது வெளியிடப்பட்டது.
இதுவே ஊக்கம் தர தொடர்ந்தும் எழுதினேன், சில வெளியிடப்பட்டன...
அவ்வாறு பல சந்தர்ப்பங்களில் எழுதியவைகளில் ஒரு எழுபது கவிதைகள் இந்நூலில் தந்திருக்கிறேன்...
பத்து இருபது வருடங்களுக்கு முன் இவற்றை மச்சான் சேவியர் வாயிலாக கேரளா பல்கலை கல்லூரி தமிழ்த் துறை முதல்வர் திரு சுவர்ணராஜ் மற்றும் தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ் துறை திரு ஜாண்சன் ஆகியோர் வாசித்து ஊக்கப்படுத்தினர்.
கொஞ்சம் நாட்களுக்கு முன் அண்ணன் அருள் சினேகத்திடமும், தொடர்ந்து தம்பி சாகரிடமும் கொடுக்க, சாகர் இன்றைய இந்த நிகழ்வுக்கு முழுமுதற்காரணமாக நின்று நடத்துகிறான்.
தம்பி சாகருக்கு நன்றி சொல்லி முடிக்க முடியாது.
இத்தனை கவிதைகளையும் நுணுக்கமாக வாசித்து, அலசி ஆராய்ந்து அணிந்துரை வழங்கியதற்கும், அதற்கும் மேலாக இன்று இங்கு வருகை தந்து, ஆய்வுரை நடத்தி அறிமுகம் செய்தமைக்கு, மாண்புமிகு குமரி ஆதவன் அவர்களுக்கு சொல்லிலடங்கா நன்றி...
தமிழை பிழையின்றி பேச, எழுத இலக்கணம், குறிப்பாக யாப்பிலக்கணமும் அறிமுகம் செய்த எமது ஆசிரியர் மாண்புமிகு சேவியர் ஆசிரியர், இந் நூலுக்கு வாழ்த்துரை எழுதி, இன்றும் வாழ்த்த வந்திருக்கிறார். அவருக்கும் நன்றி...
வாழ்த்துரை எழுதி, இன்று வருகை தர இயலாத தூய(திரு) சிலுவை கல்லூரி முனைவர் ஆன்சிமோள் அவர்களுக்கும் நன்றி.
எனது இந்த கவிதை தொகுப்பை வெளியிட வருகை தந்த நண்பர், புனித யூதா கல்லூரி ஆங்கிலத்துறை முன்னாள் முதல்வர் முனைவர் டன்ஸ்டன் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்க வந்த அண்ணன் அருள் சினேகம், தூத்தூர் புனித யூதா கல்லூரி முன்னாள் முனைவர் மச்சான் சேவியர் தாஸ், மற்றும் வழக்கறிஞர் ஜாக்குலின் அவர்களுக்கும் நன்றி.
இந்த சிறு நிகழ்வை நிறைவு செய்ய இங்கு நாகர்கோவில், இன்னும் தொலைதூர இரையுமன்துறை, கொல்லம்கோடு மற்றும் திருவனந்த புரத்திலிருந்து வருகை தந்த நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நன்றி, நன்றி, நன்றி கோடி.
தமிழ் வாழ்க!
No comments:
Post a Comment